தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா? மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமலாகுமா? மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில்
வெளிமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்க்ஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பேசிய அவர், தமிழகத்தின் 27 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு இல்லை என்றார். எஞ்சிய மாவட்டங்களில் தான் ஆங்காங்கே தொற்று பரவை இருப்பதாகவும், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ஆயிரத்தில் மூன்று பேருக்கு தான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறியதோடு, ஊரடங்கை அமல்படுத்தி கட்டுப்பாடுகளை தீவிரமாக்கும் திட்டம் தற்போது இல்லை எனவும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறினார்.
Comments