பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ரமலான் கொண்டாட பாகிஸ்தான் திரும்பப் போவதாக தகவல்.!

0 2388

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ரமலான் கொண்டாட பாகிஸ்தான் திரும்பப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

72 வயதான நவாஸ் ஷெரீப் மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் .அவர் மீது ஊழல் வழக்குகளை முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அரசு பதிவு செய்ததையடுத்து 2019 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக லாகூர் உயர் நீதிமன்றத்திடம் 4 வார காலம் அனுமதி பெற்று லண்டன் சென்றவர், அதன் பிறகு பாகிஸ்தானுக்குத் திரும்பவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் திரும்புவதற்காக நவாஸ் ஷெரீப்புக்கு அரசு சார்பில் பாஸ்போர்ட் விநியோகிக்க அவர் சகோதரரான தற்போதைய பிரதமர் ஷெபாஸ் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments