திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சினிமா பாட்டு பாடிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

0 2501
திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சினிமா பாட்டு பாடிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடிகர் சிவாஜிகணேசன் பட பாடலை பாடி அசத்தினார்.

சில தினங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு தேர்தலின் போது சிறப்பாக பணியாற்றிய 100 பேருக்கு தலா ஒரு சவரன் தங்க மோதிரத்தை வழங்கி பாராட்டினார்.

முன்னதாக நடைபெற்ற இன்னிசைக் கச்சேரியின் போது சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு திரைப்படத்தில் இடம்பெற்ற உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்ற பாடலை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments