சென்னையில் மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலம் இரண்டடுக்கு மேம்பாலமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

சென்னையில் மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலம் இரண்டடுக்கு மேம்பாலமாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பயிற்சி மைய கூட்ட அரங்கில் நடைபெறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள் - அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த பயிற்சித் திட்டம் தொடக்க விழாவில் எ.வ.வேலு கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் விதிகளுக்கு புறம்பாக உள்ள சுங்கச்சாவடிகள் அனைத்தும் கட்டாயம் அகற்றப்படும் என்றார்.
Comments