இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்.30ந்தேதி நடக்கிறது.!

0 23117

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், வருகிற  30ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த கிரகணம் பகுதி சூரிய கிரகணமாக நள்ளிரவில் நடப்பதால், இந்தியாவில் இதனை பார்க்க முடியாது.

இந்திய நேரப்படி, 30ம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு துவங்கி, மறுநாள் அதிகாலை, 4:08 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும்.  அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

இந்த ஆண்டிற்கான இரண்டாவது சூரிய கிரகணம் வருகிற அக்டோபர் மாதம் 25ந்தேதி நிகழ்கிறது. இதுவும் பகுதி சூரிய கிரகணம் என்பதால் இந்தியாவில் தெரியாது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments