கல்குவாரியில் டிப்பர் லாரி மீது ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து-லாரிக்குள் சிக்கி கொண்ட ஓட்டுநர் சடலமாக மீட்பு!

0 3081
கல்குவாரியில் கற்களை ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் இருந்த ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து

கரூர் அருகே தனியார் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி மீது ராட்சத பாறை இடிந்து விழுந்த விபத்தில், லாரிக்குள் சிக்கிக் கொண்ட ஓட்டுநர் சுமார் 15 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.

காங்கேயம்பாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சுமார் 300 அடி ஆழம் கொண்ட ( NTC கிரசர் என்ற) கல்குவாரியில் கருங்கற்களை டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டு மேலே வருவது வழக்கம். அந்த வகையில் சுமார் 200 அடி ஆழத்தில் கற்களை ஏற்றிக் கொண்டு மேலே வந்துக்கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பக்கவாட்டில் இருந்த ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதில், ஓட்டுநர் சுப்பையா டிப்பர் லாரிக்குள் சிக்கிக்கொண்டார்.

நேற்றிரவு நடந்த இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர், ராட்சத பாறைகளை வெடி வைத்து தகர்த்து, லாரிக்குள் சிக்கியிருந்த ஓட்டுநர் சுப்பையாவை சடலமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments