சென்னை ஐஐடி.யில் மேலும் 18 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி

0 2309
சென்னை ஐஐடி.யில் மேலும் 18 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ளது

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 2 ஆயிரத்து 57 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 78 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும், சிலருக்கு லேசான காய்ச்சல், தொண்டை வலி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments