சென்னையில் காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவன் கைது.!

சென்னை அசோக் நகரில் காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10-ஆவது அவென்யூவில் உள்ள தனியார் குடியிருப்பில் கடந்த 6 வருடமாக கடலூரைச் சேர்ந்த பூமலை என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பு அருகே தலையில் ரத்த காயத்துடன் மயங்கிய நிலையில் இருந்த அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட குமரன் நகர் போலீசார், சபா என்பவரை கைது செய்துள்ளனர்.
Comments