தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் - பள்ளிக் கல்வி ஆணையர்

0 2271
தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை மட்டுமே செயல்படுத்தப்படும் - பள்ளிக் கல்வி ஆணையர்

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடர்ந்து செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் மும்மொழிக் கொள்கையை புகுத்தும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தாய்மொழியாகிய தமிழ், உலகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை மட்டுமே வழக்கத்தில் இருந்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் மொழிப்பாடக்கொள்கை பற்றி உண்மைக்குப் புறம்பாக மக்களை தவறாக வழிநடத்தும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments