பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்புச்சுவற்றில் மோதி கார் விபத்து; 3 பேர் உயிரிழப்பு.!

0 3008

பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், அவரது மனைவி, மாமியார் என 3 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரான கமலக்கண்ணன் என்பவர் தனது மனைவி லதா, மாமியார் வேம்பு உட்பட மேலும் 2 உறவினர்களுடன் சென்னை நோக்கி தமது டாடா சஃபாரி காரில் சென்றுகொண்டிருந்தார்.

காரை கமலக்கண்ணன் ஓட்டிச் சென்ற நிலையில், அதிகாலை நாரணமங்கலம் என்ற கிராமத்தின் அருகே வரும்போது கமலக்கண்ணன் தூக்கக்கலக்கத்தில் சற்று கண்ணயர்ந்தார் என்று கூறப்படுகிறது.

இதில் நிலை தடுமாறிய கார், சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவற்றில் மோதிக் கவிழ்ந்து சுமார் 30 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது.

சேதமடைந்த காருக்குள் சிக்கி, கமலக்கண்ணன், லதா, வேம்பு ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments