அடகுக்கடையின் ஷட்டரை உடைத்து நகைப்பெட்டி என நினைத்து நகை ரசீதுகள் அடங்கிய பெட்டியை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

0 2870
அடகுக்கடையின் ஷட்டரை உடைத்து நகைப்பெட்டி என நினைத்து நகை ரசீதுகள் அடங்கிய பெட்டியை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

கோவை மேட்டுப்பாளையம் அருகே இரவில் நகை அடகுக்கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற இருவர், நகை ரசீதுகள் அடங்கிய பெட்டியை நகைப்பெட்டி என நினைத்து திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

பங்களாமேடு பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நகை அடகுக்கடையில் பெட்டியை திருடிய கொள்ளையர்கள் சாலையில் அதை தூக்கிச்சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அவர்களிடம் நீங்கள் யார் என கேட்டுள்ளனர்.

உடனே அவர்கள் பெட்டியை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது நகை ரசீதுகள் மட்டுமே இருந்துள்ளன. கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments