வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாளை முதல் வரும் 27ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 28ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments