மருந்துக்கடை உரிமையாளரை காரில் கடத்தி ரூ.14 லட்சம் பறிப்பு.. 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்கும் பணியில் போலீஸ் தீவிரம்

0 2405
மருந்துக்கடை உரிமையாளரை காரில் கடத்தி ரூ.14 லட்சம் பறிப்பு.. 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்கும் பணியில் போலீஸ் தீவிரம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மருந்துக்கடை உரிமையாளரை காரில் கடத்தி 14 லட்சம் ரூபாயினை பறித்த 4பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கல்லலைச்  சேர்ந்த அருள்ராஜ் என்பவர் காரைக்குடியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவரை செல்போனில் தொடர்பு கொண்ட சிலர் வெங்கட்ராமபுரத்தில் உள்ள அவரது இடத்தை விலைக்கு அல்லது குத்தகைக்கு தரும்படி கேட்டுள்ளனர்.

இதை அடுத்து இடத்தை காண்பிப்பதற்காக அருள்ராஜ் சென்ற போது அங்கு காரில் வந்த 4பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரை கடத்தி சென்றனர். பின்னர் செல்போன் மூலம் அருள்ராஜை நண்பர்களிடம் பேச வைத்து அவசர தேவை எனக்கூறி 14 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.

மேலும் ஏடிஎம் கார்டு மூலம் 15ஆயிரம் ரூபாய் பணம், தங்க மோதிரம், சங்கிலி ஆகியவற்றையும் பறித்துக் கொண்ட அந்த கடத்தல் கும்பல் திருகோஷ்டியூர் பைக்குடிப்பட்டி என்ற இடமருகே அருள்ராஜை இறக்கி விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments