டீசல் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 47 பேரல் டீசல் கடலில் கொட்டியது

0 2276
டீசல் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 47 பேரல் டீசல் கடலில் கொட்டியது

ஈகுவடார் நாட்டின் காலபகாஸ் தீவில் டீசல் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஸ்கூபா டைவிங் செய்யும் வீரர்கள் பயணிக்கும் சிறிய ரக படகில் ஏறத்தாழ 47 பேரல் டீசல் ஏற்றிச் சென்ற போது படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

படகில் பயணித்த நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், கடலில் கொட்டிய டீசலை அப்புறப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

காலபகாஸ் தேசிய பூங்கா பகுதியில் விபத்து ஏற்பட்டதால் கழிவுகள் உயிரினங்களுக்கு ஆபத்து விளைவிக்கா வண்ணம் அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments