சென்னைக்கு குடிநீர் வழங்கும் பைப்லைன் உடைந்து வீணாகிப் போன குடிநீர்.!
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சென்னைக்கு குடிநீர் வழங்கும் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டதால் விண்ணை முட்டும் அளவுக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது.
பூந்தமல்லி - பெங்களூர் நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக செம்பரம்பாக்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சமன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த இடத்தில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு செல்லும் குழாய் செல்கிறது. இந்த நிலையில் ஜேசிபி இயந்திரம் எதிர்பாராதவிதமாக அந்த குழாயின் மீது இடித்து உடைந்து போனதால் அதிலிருந்து குடிநீர் வெள்ளம் போல் விண்ணை முட்டும் அளவுக்கு சீறிப் பாய்ந்தது.
இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தி உடைப்பை சரி செய்தனர்.
Comments