முந்தி செல்வதில் இரு பேருந்துகளுக்கு இடையே போட்டா போட்டி... நூலிழையில் உயிர் தப்பிய நபர்

0 3376

கன்னியாகுமரி அருகே முந்தி செல்ல தனியார் பேருந்துகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் இருசக்கர வாகன ஓட்டி நூலிழையில் உயிர் தப்பினார்.

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பரூக் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றொரு தனியார் பேருந்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது இரு தனியார் பேருந்துகளுக்கு இடையே எதிரே வந்த இரு சக்கர வாகன ஓட்டி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனை தொடர்ந்து கேரளா போக்குவரத்து போலீசார் அபாயகரமாக வாகனங்களை இயக்கியதாக கூறி இரு தனியார பேருந்துகளின் உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுனர்கள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments