நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் காயமடைந்த பெண் எஸ்ஐக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

0 3145

நெல்லை மாவட்டத்தில் கத்திக்குத்தில் காயமடைந்த பெண் உதவி ஆய்வாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

பழவூர் அருகே கோவில் திருவிழா பாதுகாப்பு பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளரான மார்க்ரெட் தெரசாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் திடீரென அவரை கத்தியால் தாக்கினார்.

இதில் காயமடைந்த மார்க்ரெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், மார்க்ரெட் தெரசா உயர்தர சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments