உக்ரைன் போருக்குப் பிறகு இந்தியாவின் தேவைகளை அமெரிக்காதான் பூர்த்திசெய்யும் - வெளியுறவுத்துறை ஆலோசகர் டெரக் கோலட்

0 4293
உக்ரைன் போருக்குப் பின்னர் இந்தியாவின் ஆயுதத் தேவைகளை அமெரிக்காதான் பூர்த்திசெய்யும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் டெரக் கோலட் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போருக்குப் பின்னர் இந்தியாவின் ஆயுதத் தேவைகளை அமெரிக்காதான் பூர்த்திசெய்யும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் டெரக் கோலட் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போருக்குப் பிறகு  தனது இழப்பை ஈடு செய்ய சொந்த தேவைக்கான ஆயுதங்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் ரஷ்யா இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தடைகளால் ராணுவத் தளவாட தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலையும் ரஷ்யாவுக்கு இருப்பதால், இந்தியா ஆயுத வர்த்தகம் செய்வதற்கு ரஷ்யா உகந்ததாக இருக்காது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்புத் துறை மற்றும் தேச பாதுகாப்புக்கான ஆயுதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் டெரக் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments