தமிழில் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் மாரடைப்பால் மரணம்.!

0 23108

நடிகர் சிவாஜி கணேசனுடன் ரிஷி மூலம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சக்கரவர்த்தி மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 62. சிவாஜி மட்டுமல்லாமல் ரஜினி, கமல் உள்ளிட்ட நாயகர்களுடனும் நடித்துள்ள அவர் தமிழில் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகி மும்பையில் வசித்து வந்த அவர், தொலைக்காட்சி சேனல் ஒன்றில் விளையாட்டுகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்துள்ளது. சக்கரவர்த்தியின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments