ரயிலில் துப்பாக்கியை தவறவிட்ட முன்னாள் காவல் அதிகாரி...பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே ஊழியர்.!

0 2750

ஈரோட்டில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பொன்மாணிக்கவேல், ரயிலில் தவறவிட்ட துப்பாக்கியை ரயில்வே ஊழியர் மீட்டு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.

சென்னையிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பொன்மாணிக்கவேல் ஈரோடு சென்ற போது அவர் வைத்திருந்த துப்பாக்கியை ரயிலில் தவற விட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரயில்வே ஊழியர் ராகேஷ் துப்பாக்கியை மீட்டு ஸ்டேஷன் மாஸ்டரிடம் அளித்ததையடுத்து, துப்பாக்கி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர் அளித்த தகவலின்பேரில் நேரில் வந்த முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பொன்மாணிக்கவேல் தவறவிட்ட துப்பாக்கியை பெற்றுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments