கார் மோதி தூக்கி வீசப்பட்ட பைக் ஓட்டுநர்...பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி.!

0 3604

டெல்லி அருகே இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது கார் மோதியதில் பல மீட்டர் தூரம் தூக்கியெறியப்பட்ட சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

காசியாபாத் வேவ் சிட்டியில் உள்ள சந்திப்பை மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கடக்க முயன்றார். அப்போது இடது பக்கத்தில் இருந்து வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், பைக்கில் வந்த நபர் தூக்கி எறியப்பட்டார்.

விபத்துக்குள்ளான அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், அவரது உடல்நிலை நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments