முதலமைச்சர் வீட்டு முன் அனுமன் பாடல்களைப் பாடப்போவதாகப் அறிவித்த பெண் எம்பியின் வீடு முற்றுகை..!

0 2091

மஹாராஷ்டிரா முதலமைச்சர் வீட்டு முன் அனுமன் பாடல்களைப் பாடப்போவதாகப் பெண் எம்பி நவநீத் ராணா அறிவித்துள்ள நிலையில் அவர் வீட்டை சிவசேனா கட்சியினர் முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

மகாராஷ்டிரத்தில் வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக, மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டுமுன் அனுமன் பாடல்களைப் பாடப்போவதாக அமராவதி தொகுதி பெண் எம்பி நவநீத் ராணாவும், அவர் கணவரும் சுயேச்சை எம்எல்ஏவுமான ரவிராணா ஆகியோர் அறிவித்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் வீட்டுமுன் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் நவநீத் ராணா வீட்டை முற்றுகையிட்ட சிவசேனா தொண்டர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments