பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் மகன் பாலியல் குற்றச்சாட்டில் கைது.!

0 3621

தமிழகத்தில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடை நிறுவன உரிமையாளரின் மகன் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்ரீ கணபதி சில்க்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் இந்த ஜவுளி கடைக்கு தேனி, கோவை, சங்கரன் கோவில், வத்தலகுண்டு ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன.

இந்த கடையின் உரிமையாளர் மகன் முருகன் என்பவர் மீது அவர்களின் கடையில் பணிபுரிந்த பெண் ஒருவர் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

முருகன் தன்னிடம் நட்பாக பழகி திருமணம் செய்வதாக கூறி பலமுறை எல்லைமீறி நடந்துள்ளதாக மனுவில் கூறியுள்ளார். தனக்கு ஏற்கனவே தாலிகட்டிவிட்டு, தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும் அதில் கூறியுள்ளார்.

இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முருகன் சரணடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments