புல்லட் பாடலுடன்.. மீண்டும் வந்தார் நம்ம லிங்குசாமி..! சிம்பு பாட.. உதயநிதி வெளியிட... ஸ்டார்ட்..!

0 3067
நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், தமிழ்- தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ள "தி வாரியர்" படத்தின் முதல் பாடலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், தமிழ்- தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ள "தி வாரியர்" படத்தின் முதல் பாடலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

பிரபல இயக்குனர் லிங்குசாமி நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் இயக்கும் படம் தி வாரியர்.

தெலுங்கு பட உலகின் நாயகன் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் பாடலாசிரியர் விவேகா வரிகளில் உருவான புல்லட் பாடலை நடிகர் சிம்பு பாடி உள்ளார். இந்த பாடலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். பாடல் காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து ரசித்து பார்த்தார்.

நாயகன் ராம்முடன் ஆங்கிலத்தில் பேசியதாகவும், அவரும் சென்னைக்காரர் தான் என்பதை அறிந்து நண்பர்களாகி விட்டதாகவும் உதய நிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த ஒற்றை பாடலுக்கு 3 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக குறிப்பிட்ட இயக்குனர் லிங்குசாமி நாயகி கீர்த்தி ஷெட்டியை நடனமாட வைக்க மிகவும் சிரமப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் நாயகன் ராம் பொத்தினேனி நடிப்பில் மம்முட்டி, மாதவன் போன்றோருக்கு இணையாக நடித்திருப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் ரசிகர்களை கவரும் விதமாக நாயகி கீர்த்தி விசில் அடித்து அதகளப்படுத்தினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments