திருச்செந்தூர் அருகே பால் பண்ணைக்கு தீ வைத்த மர்மநபர்கள்..

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பால் பண்ணைக்கு மர்மநபர்கள் தீ வைத்து செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
ஆறுமுகநேரியைச் சேர்ந்த பாலகுமரேசன் என்பவருக்கு சொந்தமான முத்து கிருஷ்ணாபுரத்தில் உள்ள பால் பண்ணை கடந்த 20ஆம் தேதி நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் அங்கிருந்த மாடுகள், மாட்டுத் தீவனங்கள், வைக்கோல்கள் ஆகியவை எவ்வித சேதாரமும் இன்றி தப்பியது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது 2 மர்ம நபர்கள் பால்பண்ணை எதிரே உள்ள தோட்டத்திலிருந்து சாலையை கடந்து வேகமாக ஓடி வந்து பால்பண்ணையில் ஓலை செட்டுக்கு கையிலிருந்த பொருளை தூக்கி வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.
இதற்கிடையில் ஆறுமுகநேரியில் கஞ்சா போன்ற போதை பழக்கத்தில் ஈடுபடுபவர்கள் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில் பாலகுமரேசன் பங்கேற்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா கும்பல் பால்பண்ணை தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments