புதினை சந்திக்க குட்டரஸ் திட்டம்.. உக்ரைன் போரை நிறுத்தவும் அமைதியை ஏற்படுத்தவும் முயற்சி

0 2370
ஐ.நா.பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் செவ்வாய்க்கிழமை மாஸ்கோ செல்கிறார். உக்ரைன் மீதான போரை நிறுத்துவது குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் நேரில் வலியுறுத்துவதுடன், அமைதிக்கான பேச்சுவார்த்தையையும் நடத்த உள்ளார்.

ஐ.நா.பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ் செவ்வாய்க்கிழமை மாஸ்கோ செல்கிறார். உக்ரைன் மீதான போரை நிறுத்துவது குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் நேரில் வலியுறுத்துவதுடன், அமைதிக்கான பேச்சுவார்த்தையையும் நடத்த உள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 மாதங்களாக போரில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா.சபை மற்றும் பல்வேறு நாடுகளின் கோரிக்கையையும் ரஷ்யா பொருட்படுத்தாமல் போரைத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டதாகவும், இதில் 51 லட்சம் பேர் அண்டை நாடுகளிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்பு கவுன்சில், மனித உரிமை கவுன்சில் உள்ளிட்ட எந்த அமைப்பின் கோரிக்கையையும் ரஷ்யா ஏற்கவில்லை. ரஷ்யா- உக்ரைன் போர் 59வது நாளை எட்டியுள்ள நிலையில், இப்போரை நிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டானியோ குட்டரெஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை மாஸ்கோ செல்லும் ஐநா. பொதுச் செயலாளர் குட்டரஸ் , உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் அமைதிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். இதனை ரஷ்ய அதிபரின் கிரம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவையும் சந்தித்துப் பேச குட்டரஸ் திட்டமிட்டுள்ளார். ஐநா.பொதுச்செயலாளரின் மாஸ்கோ பயணம் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, ஐரோப்பிய யூனியனின் தலைவர் சார்லஸ் மைக்கேலைத் தொடர்புகொண்ட அதிபர் புதின், உக்ரைன் நிலவரங்களை விவரித்தார். போரில் உருக்குலைந்த மரியுபோலுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கும், மக்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்குமாறும் அதிபர் புதினிடம் ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.

மரியுபோல் நகரில் உள்ள உருக்காலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் உக்ரைன் வீரர்களும் சிக்கியிருப்பதாக கூறும் உக்ரைன் அரசு, அங்கிருந்து பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோரை வெளியேற்றுவதற்கு அனுமதியளிக்கும்படி கோரி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments