கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற டிராக்டர் வளைவுப்பாதையில் திரும்பிய போது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து

0 2362
கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற டிராக்டர் வளைவுப்பாதையில் திரும்பிய போது நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சாலையில் கரும்பு பாரம் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த டிராக்டர் வளைவுப்பாதையில் திரும்பிய போது நிலை தடுமாறி கவிழ்ந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தன.

கோமலூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தமது விவசாய நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை டிராக்டரில் ஏற்றி திருக்கோவிலூர் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்தார்.

மதியம் 1 மணியளவில் அந்த டிராக்டர் சந்தைப்பேட்டை புறவழிச்சாலை வளைவில் திரும்பிய போது நிலைதடுமாறி சாலையோரமாக கவிழ்ந்ததில் கரும்புகள் கீழே சிதறின.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments