கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்.!

0 2175

நாகப்பட்டினம் மாவட்டம் இறையான்குடியில், கள்ளச்சாராய வியாபாரிகளை உடனடியாக கைது செய்யக் கோரி பொதுமக்கள் காவல் நிலையத்திற்குள்ளேயே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக கள்ளசாராயம் கடத்தி வரப்பட்டு இறையான்குடி, சிங்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் விற்பனை செய்யப்படுவதாகவும் இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், வலிவலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புகார் தெரிவிப்பவர்களுக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகக் கூறி போலீசாருடன் முறையிட்டுக் கொண்டிருந்தபோதே, சிலர் காவல்நிலையத்திற்குள் நுழைந்துவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments