தமிழகத்தில் இனி எந்த சூழலிலும் மின்தடை ஏற்படாமல், சீரான மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - மின்சாரத்துறை அமைச்சர்!

0 1867

தமிழகத்தில் இனி எந்த சூழலிலும் மின்தடை ஏற்படாமல், சீரான மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்த வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் தமிழகத்தில் ஏற்பட்ட மின்தடை தொடர்பாக அரசியல் கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின்சாரம் தேவையுள்ள நிலையில்,13 ஆயிரத்து100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 18ம் தேதி 312 மில்லியன் யூனிட் நுகர்வாக இருந்தது 21ம் தேதி 363 மில்லியன் யூனிட்டாக உயர்ந்தது. இந்த நிலையில் மத்திய மின்தொகுப்பில் இருந்து வரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் வரவில்லை என விளக்கமளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments