மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி...ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் கைது.!

0 1467

மதுரையில் விஷவாயு தாக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மற்றும் 2 ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக உள்ள நிறுவன உரிமையாளர் விஜய் ஆனந்தை தேடி வரும் போலீசார், ஒப்பந்த ஊழியர்கள் இருவரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments