தேவையான நிலக்கரி கையிருப்பு வைக்காததால் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை - எடப்பாடி பழனிசாமி
தேவையான நிலக்கரி கையிருப்பு வைக்காததால் மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை - எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதை திமுக ஆட்சியின் நிர்வாக திறமையின்மையே காரணம் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மின்வெட்டைக்கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தபின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக ஆட்சியில் சத்தீஷ்கர் மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொண்டு வருவதற்கான பாதை அமைக்கப்பட்டதாகவும் அதை இந்த அரசு பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
Comments