சமையல்காரரை இரும்பு ராடால் தலையில் தாக்கி கொலை.. சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து விசாரணை

சமையல்காரரை இரும்பு ராடால் தலையில் தாக்கி கொலை.. சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து விசாரணை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சமையல்காரரை இரும்பு ராடால் தலையில் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு புதுத்தெருவை சேர்ந்த சமையல்காரரான திருமால், நேற்றிரவு வழக்கம் போல் அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, வீட்டிற்கு வெளியே இருந்த மின் மோட்டரை மர்ம நபர்கள் திருடி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது சத்தம் கேட்டு கண்விழித்த வந்த திருமால் மர்ம நபர்களை பிடிக்க வந்த போது, கையில் வைத்திருந்த இரும்பு ராடால் மர்மநபர்கள் திருமாலை தலையில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நிலைகுலைந்து விழுந்த திருமால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Comments