44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதலமைச்சர் தலைமையில் 23 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதலமைச்சர் தலைமையில் 23 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைப்பு
தமிழகத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் உறுப்பினராக கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதில், சுமார் 180 நாடுகளை சேர்ந்த சதுரங்க வீரர்கள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை சிறப்பாக நடத்தவும், அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்யநாதன், மதிவேந்தன், எம்.பி. ராசா, எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், டி.ஜி.பி சைலேந்திர பாபு, மற்றும் பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
Comments