கடத்தலில் ஈடுபடுவதை போலீசாருக்கு தெரிவித்த நண்பரை கொலை செய்ய திட்டம் தீட்டியதை தெரிந்து கொண்ட அவரின் மைத்துனர் வெட்டி கொலை.!

0 2772

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கடத்தலில் ஈடுபடுவதை போலீசாருக்கு தெரிவித்த நண்பரை கொலை செய்ய திட்டம் தீட்டியதை தெரிந்து கொண்ட அவரின் மைத்துனர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ஆலந்தலை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் மாற்று சமுதாய பெண்ணை திருமணம் செய்ததால் ஊர் தலைவராக இருந்த நண்பர் ராஜாவின் தந்தை ஊரைவிட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஜான்சன் இலங்கைக்கு கடல் வழியாக படகு மூலம் பீடி இலை, மஞ்சள் போன்ற பொருட்களை ராஜா கடத்துவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த ராஜா தனது நண்பர்கள் உதவியுடன் ஜான்சனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.

இந்த திட்டம் பற்றி ஜான்சன் மனைவியின் சகோதரர் மதன்குமாருக்கு தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து ராஜா மற்றும் நண்பர்கள் குழுவினர் மதன்குமாருக்கு மது வாங்கி கொடுத்து அரிவாளால் கண்டந்துண்டமாக வெட்டி கொலை  செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீசார் ராஜா உள்பட 5பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments