கடலூரில் தனியார் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட அரசு மிதிவண்டிகள் இருப்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை.!

0 2720

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட அரசு மிதிவண்டிகள் இருப்பது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கக்கூடிய மிதிவண்டிகள் அந்த பள்ளியில் நூற்றுக்கணக்கில் இருப்பதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.

இதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டதில் ஏராளமான  மிதிவண்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments