பிரசாந்த் கிஷோர் முன்நிபந்தனைகள் விதிக்கக்கூடாது- காங்கிரஸ் கறார்!

0 12947

முன் நிபந்தனைகள் ஏதுமின்றி தங்களது கட்சியில் இணைய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளால் தத்தளித்து வரும் நிலையில், தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது தொடர்பாக நாளை ஏப்ரல் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவர்களை பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் முன்னெடுப்புகள், மறுசீரமைப்புகள் பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கட்சியை சேர்ந்த பலரும் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என ஒருமித்த குரலில் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைப்பதற்கான ஏற்பாடுகளில் சோனியா காந்தி தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் துணைத்தலைவர் பதவியை தனக்கு அளிக்க வேண்டும் என பிரசாந்த் கிஷோர் கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், எந்தவித முன் நிபந்தனைகளும் இன்றி பிரசாந்த் கிஷோர் தங்களது கட்சியில் இணைய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின்  பொதுச்செயலாளர் தாரிக் அன்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments