ஹெல்மெட் அணியாததால் பைக்கை தடுத்து நிறுத்திய போலீசார்-ஆத்திரமடைந்த இளம்பெண் எஸ்.பியுடன் வாக்குவாதம்

0 4654

கன்னியாகுமரியில் ஹெல்மெட் அணியாததால் இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்த ஆத்திரத்தில், பைக்கில் வந்த இளம்பெண் ஒருவர் எஸ்.பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டர் கன்னியாகுமரி எஸ்.பி ஹரி கிரண் பிரசாத் தலைமையிலான போலீசார், ஆட்சியர் அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக ஒரு பைக்கில் இளைஞரும் இளம்பெண்ணும் வந்த நிலையில், இருவருமே ஹெல்மெட் அணியாததால் எஸ்.பி வாகனத்தை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்குமாறு கூறி எஸ்.பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் கண் கலங்கிய நிலையில், எஸ்.பி பொறுமையாக எடுத்துக் கூறி அவர்கள் இருவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தார். உரிய ஆவணங்கள் இல்லாததாலும், பைக்கில் நம்பர் பிளேட் இல்லாததாலும் அவர்கள் வந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments