எனது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள்.. தமது காரில் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக ஏற முற்பட்டதை நினைவு கூர்ந்த உதயநிதி

0 4224
எனது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள்.. தமது காரில் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக ஏற முற்பட்டதை நினைவு கூர்ந்த உதயநிதி

தமது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என எதிர்கட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவரை குறிப்பிட்டு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாக கூறியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர், தாம் கடந்த முறை பேசும் போது எதிர்கட்சித் தலைவர், துணைத் தலைவர் வெளிநடப்பு செய்துவிட்டதாகவும், இம்முறை அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

கடந்த வாரம் தமது காரில் எடப்பாடி பழனிசாமி தவறுதலாக ஏற முற்பட்டதை நினைவுகூர்ந்த உதயநிதி, தாங்கள் வெளிநடப்பு செய்து சென்றாலும் தனது வாகனத்தில் தான் செல்வீர்கள் என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments