ஓட்டலில் சப்ளையர் வேலையாவது கொடுங்க.. நஷ்டம் தாங்க முடியல.. தயாரிப்பாளர் கே.ராஜன் லக லக..!

0 24332

நடிகர்கள் கோடி கோடியாய் சம்பளம் பெறுவதால், தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுவதாக தெரிவித்த தயாரிப்பாளர் கே.ராஜன், தங்களுக்கு ஓட்டலில் சர்வர் வேலையாவது தாருங்கள் என்று பிரபல ஓட்டல் அதிபரிடம் கேட்ட சம்பவம் புதிய படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரங்கேறி உள்ளது.

சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் 'அட்ரஸ்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது, "மேலே இருக்கும் நடிகர்கள் நன்றாக இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களான நாங்கள் கஷ்டப்படுகிறோம் , கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் நடிகர்கள் என்ன செய்கிறார்கள்? தயாரிப்பாளர்களான நாங்கள் எப்போதும் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் தயாரிப்பில் தான் போடுகிறோம், இதில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்று கூறினார்.

விழாவுக்கு வந்திருந்த பிரபல ஓட்டல் அதிபரிடம் , தனக்கு ஓட்டலில் சர்வர் வேலையாவது கொடுங்கள், உங்கள் பிரியாணி நிறுவனத்தில் 2 அல்லது 3 ஐ எங்களிடம் கொடுங்கள் என்று காமெடியாக கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

நாமும் நஷ்டம் அடையக்கூடாது. மற்ற யாரும் நஷ்டம் அடையக்கூடாது என்றும், தயாரிப்பாளருக்கு ஆதரவாக பேசினால் எனக்கு தான் பிரச்சினை வருகிறது என்று குறிப்பிட்ட கே.ராஜன், பல ரசிகர்கள் தன்னை மிரட்டியதாகவும், சில இடங்களில் மிரட்டியவர்களுக்கு கூட நான் தான் ஜாமின் எடுத்தேன் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments