தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நான்கு நாட்களுக்கு தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், வானம் மட்டும் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக பதிவாகும் என தெரிவித்துள்ளது.
Comments