கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை.. எஸ்டேட்டில் காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரணை எனத் தகவல்

0 2301
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை.. எஸ்டேட்டில் காணாமல் போன ஆவணங்கள் குறித்து விசாரணை எனத் தகவல்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை  நடத்த உள்ளனர்.

வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தினர்.

சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் உள்ளிட்டோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இன்று சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர். எஸ்டேட்டில் காணாமல் போன நிலப் பத்திரங்கள், ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments