மூத்த திரைப்பட இயக்குனர் டி.ராமா ராவ் காலமானார்.. ரஜினியை இந்தியில் அறிமுகம் செய்து, ஏராளமான நட்சத்திரங்களை இயக்கியவர்

0 4628
மூத்த திரைப்பட இயக்குனர் டி.ராமா ராவ் காலமானார்.. ரஜினியை இந்தியில் அறிமுகம் செய்து, ஏராளமான நட்சத்திரங்களை இயக்கியவர்

பிரபல தெலுங்குப் பட இயக்குனர் டி.ராமா ராவ் சென்னையில் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84.

அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ரஜினிகாந்த், என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ், சாவித்திரி , ஸ்ரீதேவி போன்ற பெரிய நட்சத்திரங்களை வைத்து ஏராளமான தமிழ் இந்தி தெலுங்குப் படங்களை டி.ராமா ராவ் இயக்கி உள்ளார்.

தமிழில் வந்த சட்டம் ஒரு இருட்டறையை இந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டில் ரஜினியை அறிமுகம் செய்தார். மறைந்த இயக்குனருக்கு நடிகர்கள் அஜய் தேவகன் அனுபம் கெர் உள்ளிட்ட ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments