தாய்- மகன் தற்கொலைக்கு காரணமான 6 டி.ஆர்.எஸ் பிரமுகர்கள் கைது.. மிரட்டியதாக தற்கொலை செய்தவர் வீடியோ பதிவில் மரண வாக்குமூலம்

0 1874
தாய்- மகன் தற்கொலைக்கு காரணமான 6 டி.ஆர்.எஸ் பிரமுகர்கள் கைது.. மிரட்டியதாக தற்கொலை செய்தவர் வீடியோ பதிவில் மரண வாக்குமூலம்

தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியைச் சேர்ந்த 6 உள்ளூர் தலைவர்கள்,  தாயையும் மகனையும் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமயாம்பேட் டவுனில் வசித்து வந்த 63 வயதுப் பெண், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் அவரது மகன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.

தமது தொழிலில் பங்கு கேட்டு மிரட்டியதாக கவுன்சிலர் உள்ளிட்ட ஆறு டிஆர்எஸ் பிரமுகர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது தற்கொலை செய்த 40 வயது நபர் முகநூல் வீடியோ பதிவு மூலமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஏழாவது நபரான காவல்துறை அதிகாரி  சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகி விட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments