பாஜக பிரமுகர் ஜீத்து சவுத்திரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை.. வீட்டுக்கு வெளியே சுட்டுவிட்டுத் தப்பிச் சென்ற கொலையாளிகள்

0 4570
பாஜக பிரமுகர் ஜீத்து சவுத்திரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை.. வீட்டுக்கு வெளியே சுட்டுவிட்டுத் தப்பிச் சென்ற கொலையாளிகள்

டெல்லியில் மயூர் விஹார் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர் ஜீத்து சவுத்திரி என்பவர் தமது வீட்டுக்கு வெளியே இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று இரவு இரண்டு பேர் ஜீத்துவை சுட்டுக் கொன்ற பின்னர் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் காண போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிதறிய துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் முக்கியத் தடயங்களை போலீசார் சேகரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments