ரயில் தண்டவாளத்தில் நின்று "செல்பி" எடுத்தால் ரூ.2,000 அபராதம் - தெற்கு ரயில்வே

0 1552

சென்னையில், ரயில்வே தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்போருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டில் சென்னை புறநகர் ரயிலில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளது.

இதையடுத்து, படியில் தொங்கியபடி பயணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம், படியில் பயணம் செய்வோருக்கு 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும், தண்டவாளங்களில் நின்று செல்பி எடுப்போருக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments