பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகை.!

0 1677

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக  இன்று இந்தியா வருகிறார்.அவர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ரஷ்யா-உக்ரைன் போர், தீவிரவாதம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்த உள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார். இதற்காக அவர் லண்டனில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டார்

குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் ஜான்சன், இந்திய முன்னணி தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்துப் பேச இருக்கிறார். அப்போது இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் வர்த்தகம், புதிய முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

வெள்ளிக்கிழமை போரிஸ் ஜான்சன் டெல்லி செல்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு மரியாதையை ஏற்ற பின்னர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.

அப்போது பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா - பிரிட்டன் நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகளும் அவரவர் நிலைப்பாட்டுக்குத் மதிப்பு தருவதாக ஒப்புக் கொண்டுள்ளன.

இந்தியாவின் நிலைப்பாட்டை போரிஸ் ஜான்சன் எந்தவித இடை மறித்தலும் இல்லாமல் கேட்டுக் கொள்வார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியர்களுக்கு இங்கிலாந்தில் வேலைவாய்ப்புகளுக்கான விசாக்களை அதிகரிப்பது , இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட உள்ளது.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குவதைக் குறைப்பதற்காக இந்தியாவில் ராணுவத் தளவாட உற்பத்தியை ஊக்குவிக்கவும் பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த முக்கியப் பங்காற்றிய கோவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியா உள்நாட்டில் உற்பத்தி செய்ய பிரிட்டனும் இங்கிலாந்து வலுவான ஒத்துழைப்பு அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments