மதுரையில் காதலியுடன் ஹோட்டலில் தங்கியிருந்த இளைஞர் சடலமாக மீட்பு.!

0 100680

மதுரையில் காதலியுடன் ஹோட்டலில் தனிமையில் தங்கியிருந்த பொறியியல் மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஞானஒளிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெப்ரி சால்ஸ் என்ற இளைஞர் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை பழங்காநத்தம் பகுதியிலுள்ள ஹோட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கியிருந்துள்ளனர்.

அப்போது, இரவு 11 மணியளவில் ஹோட்டல் ஊழியர்களை அழைத்த அந்த இளம்பெண், தாம் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், எதேர்ச்சியாக எழுந்து பார்த்த போது காதலன் ஜெப்ரி தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்த தாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் மாணவரின் சடலத்தை மீட்டு, காதலியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments