தூத்துக்குடியில் மீன்பிடி தொழிலாளியை அரிவாளால் வெட்டிக் கொன்று புதைத்த நண்பர்கள்.!

0 2298

தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தல் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த ஆத்திரத்தில், மீன்பிடி தொழிலாளியை அவரது நண்பர்களே கொன்று புதைத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திரேஸ்புரத்தை சேர்ந்த மதன்குமாரின் நண்பர்களான லயோ, முத்துமல்லைராஜ், மரிய அந்தோணி ஆகியோர் இலங்கைக்கு சட்டவிரோதமாக போதைப் பொருள், மஞ்சள் உள்ளிட்டவற்றை கடல் வழியாக கடத்தி வந்த நிலையில், இது குறித்து மதன்குமார் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த ஆத்திரத்தில் இருந்த மதன்குமாரின் நண்பர்கள் சம்பவத்தன்று அவரை மது அருந்தலாம் எனக் கூறி மறவன்விளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று நன்றாக குடிக்க வைத்து, அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததோடு, சடலத்தை எரித்ததாக கூறப்படுகிறது.

பின்னர், பாதி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு தப்பியோடியதாக சொல்லப்படுகிறது. சம்பவம் தொடர்பாக, மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒருவனை மட்டும் கைது செய்தனர். வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments