ஒற்றை ஆளாக பேரிகார்டுகளை தள்ளிகொண்டிருந்த பெண் காவலர்.. பாராட்டிய அமைச்சர்
சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சரின் கார் செல்வதற்கு சாலையில் இருந்த பேரிகார்டை தனி ஆளாக அகற்றிய பெண்ணை பார்த்த அமைச்சர் முத்துச்சாமி, காரை விட்டு கீழே இறங்கி அவரை பாராட்டினார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் அமைச்சரின் கார் செல்வதற்கு சாலையில் இருந்த பேரிகார்டை தனி ஆளாக அகற்றிய பெண்ணை பார்த்த அமைச்சர் முத்துச்சாமி, காரை விட்டு கீழே இறங்கி அவரை பாராட்டினார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து பசுமைவழிச் சாலைக்கு செல்ல பொதுவாக அடையாறு எல்.பி.சாலை பாலம் சென்று திரும்பி வர வேண்டும். ஆனால், அமைச்சர்களின் கார்கள் மட்டும் டி.ஜி.தினகரன் சாலை வழியாக நேரடியாக பசுமை வழிச்சாலை நோக்கி அனுமதிக்கப்படும்.
மற்ற நேரங்களில் டி.ஜி.தினகரன் சாலை பேரிகார்டு போட்டு மூடப்பட்டிருக்கும். இந்த நிலையில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி பசுமை வழிச்சாலைக்கு திரும்பும் போது,போக்குவரத்து பெண் காவலர் ஒருவர் தனியாக சாலை தடுப்புகளை அகற்றி வழி ஏற்படுத்தியுள்ளார். இதை கவனித்த அமைச்சர் முத்துசாமி வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்து பெண் காவலரை பாராட்டினார்.
Comments