தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக கூறி அதிமுக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு!

0 1636

மயிலாடுதுறையில் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கருப்புக் கொடியேந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தை கண்டித்து, பேரவையில் இருந்து அதிமுக, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் வருகைக்கு முன்னதாகவே அங்கு போராட்டக்காரர்கள் கூடி பதற்றம் ஏற்பட்டதாகவும், இதனை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அவர்களை அப்புறப்படுத்தாமல் இருந்தது தவறு எனக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டியதோடு, அதிமுக வெளிநடப்பு செய்வதாக கூறினார்.

பின்னர், பேரவையில் இருந்து வெளியேறிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வறண்டாவில் நின்று கோஷம் எழுப்பினர். அப்போது சபாநாயகர் அவைக் காலவர்களை அழைத்து அதிமுகவினரை வெளியேற்றும் படி உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments